states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வந்துள்ள இரண்டு எரிவாயு கப்பல்களில் தலா 46,000 மெட்ரிக் டன்களுக்கு மேல், ஒட்டுமொத்தமாக 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி மட்டுமே வந்துள்ளது. இந்த 92,700 மெட்ரிக் டன் எரிவாயு, இந்தியாவின் ஒட்டுமொத்த ஒரு நாள் தேவையுடன் ஒப்பிடும்போது வெறும் 1.25 முதல் 1.6 நாட்களுக்கு மட்டுமே போதுமானது.

ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி

நாட்டில் 1 கோடியே 10 லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். ஆனால், ‘என்டையர் பொலிட்டிகல் சயின்ஸ்’ எனும் ஒரே ஒரு பாடப்பிரிவில் மட்டும் 100% வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த ஒரு நபர் நேரடியாகப் பிரதமராகிவிட்டு (மோடி), இன்று 67% பட்டதாரிகளை வேலையில்லாமல் அமர வைத்துள்ளார்.

திரிணாமுல் எம்.பி., டெரெக் ஓ’பிரையன்

20 ஆண்டுகளுக்கு முன்பு, 10 மசோதாக்களில் 6 மசோதாக்கள் விரிவான ஆய்விற்காக நாடாளுமன்றக் குழுக்களுக்கு அனுப்பப்படும். ஆனால் இப்போது, 10இல் வெறும் 2 மசோதாக்கள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. நாடாளுமன்றத்தை கிண்டல் செய்யும் மோடி அரசிடம் இருந்து இதைவிடச் சிறந்த எதையும் எதிர்பார்க்க முடியாது.

பத்திரிகையாளர் இந்திரஜித் குந்து

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த 72 மணி நேரத்திற்குள்ளேயே, அதிகாரிகள் இடமாற்றம் மூலமாக மேற்கு வங்க மாநில நிர்வாகத்தை தேர்தல் ஆணையம் முழுமையாக மாற்றியமைத்துள்ளது. அதாவது பாஜகவிற்கு ஆதரவாக ஒரு மாநிலத்தையே தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.