அசாமில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜக கலக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து
கவுகாத்தி 126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் ஏப்., 9 அன்று சட்ட மன்ற வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜ கவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வலு வான கூட்டணி அடித்தளத்துடன் களமிறங்கியுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக ளின் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அசாம் தேசிய பரிஷத், ஏபிஹெச்எல்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை, ராய்ஜோர் தளம் ஆகிய கட்சிகளும் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கட்சிக ளுடன் கூட்டணிக்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அசாமில் எதிர்க் கட்சிகளின் ஒற்றுமை பாஜகவை கலக்கமடைய செய்துள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறி யுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் சுப்ரகாஷ் தாலுக்தார்,”எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மற்றும் கூட்டணிக்கு பெருகி வரும் ஆதரவு பாஜக தலை மையைக் கலக்கமடையச் செய்துள்ளது. அவர்களின் ‘இரட்டை எஞ்சின்’ அரசு இருந்த போதிலும், மக்கள் என்ன நினைக்கி றார்கள் என்பது இப்போது முதலமைச்சருக்குத் (பிஸ்வா சர்மா) தெரியும். ஒரு ஐக்கியமான கூட்டணிக்கு இது ஒரு நல்ல தொடக்கம்” என அவர் கூறினார். காங்கிரஸ் தலை மையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிக்கு (பவானிபூர்-சோர்பாக், கோரேஸ் வர்) ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
