states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்

மத்திய கிழக்கில் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர், அவர்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் மலையாளிகள் ஆவர். இந்தப் பகுதி தான் இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி வருவாய் வருவதற்கான முதன்மை ஆதாரமாகவும் உள்ளது. தாயகம் திரும்பியவர்களுக்கும், இனி திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுபவர்களுக்கும் ஒன்றிய அரசு மறுவாழ்வுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

ஒன்றிய பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது. போர் காரணமாக நாட்டில் பல்வேறு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் மோடி அரசோ முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது போல  விளக்கம் அளித்து வருகிறது. 

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் இம்ரான் நபி தார்

போர் என்பது எதற்கும் தீர்வாகாது. ஒரு நாட்டில் மோதல் நீடித்தால், அது மற்ற நாடுகளையும் பாதிக்கும். இது தான் மேற்கு ஆசியாவின் நிலைமை. ஈரானும் அமெரிக்காவும் தங்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்து உரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி

கிரிக்கெட்டில், கம்பீரின் ஆக்ரோஷ குணம் அனைவரும் அறிந்ததே. ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும், அவரின் ஆக்ரோஷம் பல சமயங்களில் சாதகமாக அமைந்தாலும், களத்தில் மோதல்கள் ஏற்பட காரணமாக இருந்துள்ளது. கம்பீர் இந்த அளவு முரட்டுத்தனமாகவும், கடுமையாகவும் நடந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.