கொரோனா போன்ற நெருக்கடிக்கு தயாராகிறது இந்தியா மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பேச்சு
மத்திய கிழக்கில் நிலவும் போரின் தாக்கங்களைக் கண்காணிக்க வும், தேவையான நிவாரண நடவ டிக்கைகளை எடுக்கவும், செயலாளர் அந்தஸ்திலான அதிகாரிகள் தலைமை யில் ஏழு அதிகாரமளிக்கப்பட்ட குழுக்க ளை அரசு அமைத்துள்ளதாகப் பிரதமர் மோடி செவ்வாயன்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்தார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அவர் மேலும் பேசுகையில்,”கொரோனா காலத்தைப் போன்றே, இப்போதும் ஏழு அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் விநியோகச் சங்கிலி, பெட்ரோல்-டீசல், உரங்கள், எரிவாயு மற்றும் விலைவாசி போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தும். இந்த நெருக்கடி ஏழைக ளையும், புலம்பெயர் தொழிலாளர்க ளையும் பெரிதும் பாதிக்கும். அவர்க ளுக்கு பிஎம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழக்கமான உதவிகள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக, திங்களன்று நாடாளு மன்ற மாநிலங்களவையிலும் மத்திய கிழக்கில் நிலவும் போரின் தாக்கங்கள் கொரோனா போன்ற நெருக்கடியை போன்று இருக்கும் என அவர் கூறி யிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 7 அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் மத்திய கிழக்கில் நிலவும் போரின் தாக்கங்களைக் கண்காணிக்க வெளியுற வுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, எண்ணெய் துறை செயலாளர் நீரஜ் மிட்டல், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அனுராதா தாக்கூர், உரத்துறை செயலாளர் ரஜத் குமார் மிஸ்ரா, நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே, கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை செயலா ளர் விஜய் குமார், தகவல் மற்றும் ஒளி பரப்புத் துறை செயலாளர் சஞ்சய் ஜாஜு ஆகியோர் அடங்கிய 7 அதிகாரம ளிக்கப்பட்ட குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
