கேரளத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய 2 வேலை நாட்களே உள்ளன
கேரளத்தில் சட்டமன்றத் தேர்த லுக்கான வேட்புமனுக்கள் பொது விடுமுறை நாட்க ளான, ஞாயிறு மற்றும் ஈத் விடுமுறை நாட்களில் ஏற்கப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் 23ஆம் தேதியுடன் முடிவ டைய உள்ள நிலையில், அடுத்து வரும் பொது விடுமுறை நாட்களைத் தவிர்த்துப் பார்த்தால், வேட்பாளர்களுக்கு இன்னும் சனி மற்றும் திங்கள் ஆகிய இரண்டு வேலை நாட்களே உள்ளன. புதன்கிழமை வரை இரண்டு வேட்பா ளர்கள் மட்டுமே தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். ஆரன்முளா தொகுதியில் எஸ்யுசிஐ வேட்பாளரும், சங்ஙனாசேரி தொகு தியின் சுயேச்சை வேட்பாளரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தி ருந்தனர். வேட்புமனுக்களின் பரிசீலனை 24ஆம் தேதி நடைபெறும். வேட்பா ளர்கள் 26ஆம் தேதி வரை தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெறலாம். விடுமுறை நாட்களில் வேட்புமனுக் களை ஏற்க வாய்ப்பளிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், தேர்தல் ஆணையம் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது.
