headlines

img

போர் நிற்கட்டும்!

போர் நிற்கட்டும்!

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினர் தொடுத்த தாக்குதலின் விளைவாக மோதல் நீடித்து வருகிறது. இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயி ரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள் ளன. முன்னதாக ஈரான் பாதுகாப்புத் துறைத்  தலைவர் அலி லரிஜானியும் கொல்லப்பட்டுள் ளார். ஈரானின் எந்தவொரு தலைவரையும் கொல்வதற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளார்.

கள் ஈரானை மேலும் மேலும் ஆத்திரப்படுத்துவ தால் இருதரப்பு மோதல் தொடர்ந்து நீடித்து வரு கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான மோதலாக மட்டும் இது இல்லை. மாறாக, ஈரா னுக்கும் பல்வேறு வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான மோதலாக நீடிக்கிறது. இதனால் உலகம் முழுவதும் மிகப் பெரிய எரிபொருள் நெருக் கடியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இதுகுறித்து கவலைப்படுவதாகத் தெரிய வில்லை. மாறாக, அமெரிக்க ஜனாதிபதி டொ னால்டு டிரம்ப் இந்த போரில் ஏன் நேட்டோ  நாடுகள் இணையவில்லை; இதற்கான விலை யை அவர்கள் கொடுக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டுகிறார். ஆனால் பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ நாடுகள் டிரம்ப்பின் மிரட்டலைக் கண்டுகொள்ளவில்லை. 

ரஷ்யாவுக்கு எதிராகவும் உக்ரைனுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா செயல்பட்டது. இது நேட்டோ நாடுகளின் பெயராலேயே நடத்தப் பட்டது. ஆனால் நேட்டோ நாடுகள் அமெரிக்கா வுக்கு உதவ மறுப்பதாக டிரம்ப் புலம்புகிறார். உண்மையில் ஈரான் மீதான தாக்குதல் என்பது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கொண்டு தேன்கூட்டை கலைத்த கதையாகிவிட்டது.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குத லால் ஏற்படும் சேதத்தை இஸ்ரேல் மூடி மறைக்கி றது. மறுபுறத்தில் பல்வேறு வளைகுடா நாடுக ளில் அமெரிக்காவின் படைத்தளங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருதரப்பும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அறிகுறி தெரியவில்லை. 

எண்ணெய் வயல்கள், எரிவாயுக் கிடங்கு கள் மீது பரஸ்பரம் நடத்தப்படும் தாக்குதல் என்பது மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி யுள்ளது. இது எங்கே போய் முடியுமோ என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரின் கொடும் விளைவுகள் ஒவ்வொரு வீட்டின் அடுப்படி வரை வந்துவிட்டது. வாக னங்களுக்கான எரிபொருள் குறித்த அச்சமும் அதிகரிக்கிறது. இத்தகைய போரை நிறுத்துவ தற்கு ஐ.நா. அமைப்பு வலுவாக இல்லை. அதை  ஏற்கெனவே அமெரிக்கா வலுவில்லாத ஒன்றாக மாற்றிவிட்டது. இந்தப் போர் முடிவுக்கு வருவ தும், அமைதி திரும்புவதும் நாடுகளின் இறை யாண்மை பாதுகாக்கப்படுவதும் உடனடித் தேவையாக உள்ளது.