அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அவரது மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையாலும், கணவரின் சித்தரவதையாலும் திருமணமான 78 நாட்களில் ரிதன்யா என்ற இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் ஏற்கனவே ரிதன்யாவின் கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது தலைமறைவாக இருந்த அவரது மாமியார் சித்ராதேவி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.