சிவசேனா (உத்தவ்) மாநிலங்களவை தலைவர் சஞ்சய் ராவத்
மகாராஷ்டிராவில் அரசு அலுவல் மொழியாக மராத்தி இருக்கையில் இந்தி போதிக்க தேவையில்லை. முதலில் மராத்தியை முழுமையாக கட்டாயமாக்குங்கள். பணி, தொழில் மற்றும் வியாபாரங்களில் முதலில் மராத்திக்கு மதிப்பு கிடைப்பது அவசியம். இந்தி மொழியின் பாலிவுட் பட உலகமே மகாராஷ்டிராவில் தான் உள்ளது.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி
காரில் ஊழலை நிறுவனமயமாக்கியது நிதிஷ் குமாரைச் சாரும். குறிப்பாக நிதிஷ் குமார்அரசு நிதியை தனது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தி வருகிறது. இதனால் பீகார் மாநிலத்தில் நிதி குழப்பம் நீடிக்கிறது.
ஊடகவியலாளர் ராணா அயூப்
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 13 வயது இஸ்லா மிய சிறுவனை, சில சிறுவர்கள் தங்களின் காலை தொட்டு வணங்கச் சொல்லி இருக்கிறார்கள். சிறுவன் மறுத்ததற்கு ‘ஜெய்ஸ்ரீராம்’ கோஷம் போடும்படி அந்தச் சிறுவர்கள் சொல்லி இருக்கின்றனர். பிறகு ஒரு பாட்டிலை உடைத்து, இஸ்லாமிய சிறுவனின் காலில் குத்தியிருக்கி றார்கள். கண்களை மறைக்கிறது மதவாதம்.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண்
உச்சநீதிமன்றம் தனக்கான அரசியலமைப்பு கடமையை செய்திருக்கிறது. அரசியலமைப்பை ஒன்றிய அரசாங்கம் அவமதிக்கும் போக்கை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தியிருக்கிறது. எனவே துணை ஜனாதி பதி ஜகதீப் தன்கர் உள்ளிட்ட முகாம், உச்சநீதிமன் றத்துக்கு எதிராக கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறது.