tamilnadu

img

ஆழ்கடலில் மிகப்பெரிய பவளப்பாறைகளின் கண்டுபிடிப்பு

ஆழ்கடலில் மிகப்பெரிய பவளப்பாறைகளின் கண்டுபிடிப்பு

இதுவரை அறியப்பட்டதில் மிகப்பெரிய பவளப்பாறைகளை விஞ்ஞானிகள் படமெடுத்து கண்டுபிடித்துள்ளனர். இவை அமெரிக்காவின் தென்கிழக்கில்  அட்லாண்டிக் கடற்பகுதியில் நூற்றுக்கணக்கான மைல்கள் நீளத்தில் அமைந்துள்ளன. 1960கள் முதல் அட்லாண்டிக் பகுதியில் பவளப்பாறைகள் உள்ளன என்றாலும் கடலின் அடித்தட்டில் நீருக்கு அடியில் முப்பரிமாணப் படங்களை எடுக்க உதவும் புதிய படமெடுக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படும் வரை இவற்றின் அளவு மற்றும் பரப்பு பற்றிய விவரங்கள் புதிராகவே இருந்தது.

கண்டுபிடிக்கப்படுவதற்காகவே காத்துக்கொண்டிருந்தது “மிகப்பெரிய இந்த ஆழ்கடல் பவ ளப்பாறைகள் இதுவரை நாம் கண்டு பிடிக்கப்படுவதற்காகவே காத்துக் கொண்டிருந்தது” என்றுகடல்சார் ஆய்  வுக்கான தன்னார்வல அறக்கட்டளை அமைப்பின் (Ocean Exploration Trust) கடல்சார் ஆய்வாளர் டெரிக் ஸோவர்ஸ் (Derek Sowers) கூறு கிறார். ஸோவர்ஸ் தேசிய கடல்சார் மற்றும் வளிமண்டல ஆய்வு முகமை யின் (NOAA) விஞ்ஞானிகள் உள்ளிட்ட  ஆய்வாளர்களுடன் இணைந்து இப்பவளப்பாறைகளின் படங்களை ஜியோமேட்டிக்ஸ் (journal (Geomatics) என்ற ஆய்விதழில் வெளி யிட்டுள்ளார். இந்த பவளப்பாறைகள் 310 மைல்/ 500 கிலோமீட்டர் வரை பரவியுள்ளன. சில இடங்களில் இவற்றின் அகலம் 68 மைல்/110 கிலோமீட்டர். இவற்றின்  மொத்த பரப்பு யெல்லோ ஸ்டோன் தேசியப் பூங்காவை போல மூன்று  மடங்கு  பெரியது. “இந்த கண்டு பிடிப்பு நம் கண்களை அகலத் திறந்து  ஆச்சரியப்படவைத்துள்ளது” என்று ஸ்கிரிப்ட்ஸ் (Scripps)  கடல்சார் அறிவி யல் கழகத்தின் கடலியலாளர் ஸ்டூவர்டு  சாண்டின் (Stuart Sandin) கூறுகிறார்.  இவை 655 முதல் 3280 அடி/200 முதல்  1,000 மீட்டர் வரையிலான ஆழத்தில் அமைந்துள்ளன. ஒளிச்சேர்க்கையின் உதவியுடன் உணவு தயாரித்து ஆற்றல் பெறும் மற்ற  பவளப்பாறைகளைப் போலில்லாமல் சூரிய ஒளி புகமுடியாத கடலாழத்தில் வாழும் இவை நீரில் இருந்து உண வுத்துகள்களை வடிகட்டி ஆற்றலைப் பெறுகின்றன. கடலின் ஆழத்தில் வாழும் இவை சுறாக்கள், கடல் உண வாகப் பயன்படும் பற்களற்ற, வாள்  போன்ற கூர்மையான மேல் தாடையு டைய வாள் மீன்கள் (Swordfish), கடல்  நட்சத்திர மீன்கள், நீராளிகள், இரால்  கள் போன்ற பல்வேறு மீனினங்களுக்கு  வாழிடமாக அமைகிறது. சுலபமாகச் சென்றடைய முடியும்  என்பதால் வெப்பமண்டலப்பகுதி களில் உள்ள பவளப்பாறைகளைப் பற்றி விஞ்ஞானிகள் மற்றும் நீரில்  மூழ்கி விளையாடுபவர்கள், சுவா சிக்கப் பயன்படும் காற்றறைகள் உள்ள  கருவியின் உதவியுடன் நீரில் நீந்து பவர்கள் (snorkelers) போன்றோ ருக்கு நன்கு தெரியும். ஆஸ்திரேலியா வில் உள்ள தி கிரேட் பேரியர் ரீஃப்  (The Great barrier reaf) என்ற உல கின் மிகப்பெரிய பவளப்பாறைத் திட்டு கள் 1,430 மைல்/2,300 கிலோமீட்டர் பரப்பில் பரந்து காணப்படுகிறது. உலகின் 25% கடல் தரைப்பரப்பு  மட்டுமே உயர் தர தொழில்நுட்பத்து டன் இதுவரை படமெடுக்கப்பட்டுள் ளது என்பதால் வருங்காலத்தில் ஆழ மான கடற்பகுதியில் அமைந்துள்ள  பெரிய பவளப்பாறைகள் புதிதாக கண்டுபிடிக்கப்பட வாய்ப்புகள் அதிக மாக உள்ளன என்று ஆய்வாளர்கள்  நம்புகின்றனர். ஆழமான கடற்பகுதி யில் உள்ள பவளப்பாறைகள் கப்பல்  களில் எடுத்துச்செல்லப்படும் உயர்  தொழில்நுட்ப மீ ஒலி (SONAR)கருவி களின் உதவியுடன் படமெடுக்கப்படு கின்றன. கடலின் ஆழமான தரைப்பரப் பில் ஆழ்கடல் பவளப்பாறைகளே வெப்ப மண்டலப் பவளப்பாறைகளை விட  அதிகமான பரப்பில் காணப்படு கின்றன. “இந்த இருவகை பவளப் பாறை வாழிடங்களும் காலநிலை மாற்  றம், எண்ணெய் மற்றும் வாயு எடுக்கும் பணிகளால் பாதிப்பிற்கு உள்ளாகும் இயல்புடையவை” என்று டெம்பிள் (Temple) பல்கலைக்கழக கடல்சார் ஆய்வாளரும் ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியருமான எரிக் கார்ட்ஸ்  (Erik Cordes) கூறுகிறார். ஒளி புகமுடியாத கடலாழத்தில் மிகப்பெரிய அளவில் அமைந்துள்ள இவற்றின் கண்டுபிடிப்பு இன்னும் உல கக் கடல்களில் கண்டறியப்படாமல் மறைந்திருக்கும் பவளப்பாறைகளை புதிதாக கண்டுபிடிக்க ஆய்வாளர் களுக்கு ஊக்கமளிப்பதாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.