பிரதமர் மோடியின் வாழ்க்கை பற்றிய இணையதள நிகழ்ச்சித் தொடருக்கு இன்று தேர்தல் ஆணையம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
கேரளா பத்தினம்திட்டா நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் கே.சுரேந்திரனின் மீதான குற்ற வழக்குகள் செய்தித்தாள் ஒன்றின் 4 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தை மோடியின் சேனை என கூறிய உத்தரப்பிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யனாத்தை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது.
பாஜக தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம் காந்தி நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நிலையில், தனது சொத்து விவரங் களை அவர் தாக்கல் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து, வாரணாசி தொகுதி யில் போட்டியிட உள்ளதாக முன்னாள் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் அறிவித்துள்ளார்.
மோடியின் எதிர்ப்பலை நாடு முழுவதும் எதிரொலித்து வருகிற நிலையில் அதனோடு கூட்டணி வைத்துள்ள உள்ள அதிமுக காணாமல் போகும் என கோவை சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் உரையாற்றினார்.
புதுச்சேரி மக்களவைத்தொகுதிக்கு ஏப்ரல்18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. திமுக மற்றும் இடதுசாரிக்கட்சிகளின் ஆதரவுடன் இந்த தொகுதியை அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிடமிருந்து கைப்பற்றும் முனைப்பில் உள்ளது காங்கிரஸ்.