tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

முனைவர் பட்ட சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம், டிச.27– பெரியார் பல்கலைக்கழகத்தின் 27 துறைகள், தருமபுரி முதுநிலைப் பட்ட மேற்படிப்பு மையம் மற் றும் அங்கீகாரம் பெற்ற இணைவு பெற்ற கல்லூரிக ளில், டிசம்பர்-2025 பருவத்திற்கான முனைவர் பட்ட (Ph.D.) சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மொழி, கலை, அறிவியல், வணிகம் மற்றும் மேலாண்மை ஆகிய புலங்களில் ஆய்வு மேற்கொள்ள  விருப்பமுள்ள மாணவர்கள், பல்கலைக்கழக இணை யதளமான www.periyaruniversity.ac.in வாயி லாக டிச.19 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். மாணவர் நலன் கருதி, ஆராய்ச்சிப் பாடத் திட்டக்குழு மற்றும் ஆட்சிக்குழு ஒப்புதலுடன் இந் தாண்டு முதல் ஆய்வு மாணவர் சேர்க்கை விதிமுறை கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி (ஒற் றைச்சாளர முறை) மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  முனைவர் பட்ட பொது நுழைவுத் தேர்வுக்கு (CET) விண்ணப்பிக்கும் மாண வர்களில், ஏற்கனவே NET / SET / SLET / JRF ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நுழைவுத் தேர் வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பி னும், அவர்களும் சேர்க்கைக்குத் தவறாமல் விண்ணப் பிக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பல்கலைக் கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பறவைகள் கணக்கெடுப்பு

தருமபுரி, டிச.27- ஒகேனக்கல் வனத்துறை சார்பில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு சனியன்று நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் அழிந்து வரும் சூழ்நிலை யில் உள்ள பறவைகளை பாதுகாக்கும் பொருட்டு, பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வரு கிறது. அதன்படி, ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள  அரியவகை பறவைகள் மற்றும் தமிழகத்தில் குளிர் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவை களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்தொடர்ச்சியாக தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், ஒகேனக்கல் வனச் சரகத்தில் வனச்சரக அலுவலர் சிவகுமார் தலைமையி லான வனக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றி ணைந்து பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் சனி யன்று ஈடுபட்டனர். ஊட்டமலை, ஆலம்பாடி, முயல் மடுவு, சின்னாறு வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தினர். இதில் அரிய வகை பறவைகள் மற்றும் கொக்கு, நாரை, நீர் காகம், இருவாச்சி பறவை, சிட்டுக்குருவி, மற்றும் தேன் சிட்டு, செண்பகம், அரியவகை ஆந்தை, துடுப்பு வால் கரைச் சான், செந்தலை பஞ்சுருட்டான், வென் புருவ வாலாட்டி, மணிப்புறா, இன்னும் பல வகையான பற வைகளை கண்டறிந்தனர்.

நிதி நிறுவன ஊழியரை  மிரட்டி பணம் திருட்டு

நாமக்கல், டிச.27- தனியார் நிதி நிறுவன ஊழியரிடமிருந்து கத்தியை  காட்டி மிரட்டி பணம் திருட்டி சென்ற ஒருவரை போலீ சார் கைது செய்த நிலையில், 2 பேரை தேடி வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (27). இவர் ஐடிஎஃப்சி பஸ்ட் பாரத் என்கிற தனியார் நிதி நிறு வனத்தில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வரு கிறார். இவரும் இவருடன் அதே நிறுவனத்தில் கலெக் க்ஷன் ஏஜெண்டாக வேலை செய்து வரும் பூவர சன் (24) என்பவரும் இவர்கள் நிறுவனத்தில் கடன் கேட்டிருந்த கொசவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த  வையக ராஜா என்பவரது வீட்டிற்கு சென்றனர். அப் போது வையக ராஜா வீட்டில் இல்லாததால் மதிய உணவை அருகில் இருந்த வேப்பமரத்தடியில் வண்டி மேலே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கார்த்தி மற்றும் பூவரசன் ஆகியோரை உங்களுக்கு இங்கு என்ன வேலை என கேட்டு கத்தியை காட்டி மிரட்டி கலெக்க்ஷன் பணம் ரூ.34 ஆயிரத்து 200 ஐ  பிடுங்கிக் கொண்டதோடு வேப்பமரத்தில் குச்சியை உடைத்து இருவரையும் தாக்கியுள்ளனர். பணத்தை பறி கொடுத்த கார்த்தி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட திருச்செங் கோடு காவல் நிலைய போலீசார் சம்பவத்தில் தொடர்பு டைய வெல்டிங் பட்டறையில் வேலை செய்துவரும் சரத் என்கிற சரத்குமார் (30), பார்த்திபன் (40) வெள்ளி யங்கிரி (40) என மூன்று பேர் தான் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை தேடிச் சென்றபோது வீட்டில் பதுங்கி இருந்த சரத் என்கிற சரத்குமாரை வெள்ளியன்று போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பேரை நகர போலீ சார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகர் தலைமை யில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்ற னர். கைது செய்யப்பட்ட சரத்திடம் இருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் சரத் மீது வழக்குப்பதிவு செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தினர்.

இண்டூரில் கூட்டுறவு வங்கி துவக்கம்

தருமபுரி, டிச.27- மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை,  இண்டூரில் திங்களன்று (நாளை) தொடங்கப்பட வுள்ளது. தருமபுரி மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி யின் 21 கிளைகள் செயல்பட்டு வருகின்றன. தருமபுரி யில் இருந்து பென்னாகரம் செல்லும் வழியில் உள்ள  இண்டூரில் (நல்லம்பள்ளி வட்டம்) மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை தொடங்க முடிவு  செய்யப்பட்டு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்  அனுமதி பெறப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியிடம் உரி மம் பெறப்பட்டுள்ளது. புதிய கிளை இண்டூரிலிருந்து பாப்பாரப்பட்டி செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்க எதுவாக பாது காப்பு பெட்டகங்கள், பாதுகாப்பு கதவுகள், வாடிக்கை யாளர் பாதுகாப்பு பெட்டகம் மற்றும் நவீன வசதிகளு டன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கிளை திங்க ளன்று (நாளை) முதல் தொடங்கப்படவுள்ளது.

பைக்காரா நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல அனுமதி!

உதகை, டிச.27- மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு பைக்காரா நீர்வீழ்ச்சியை சுற்றுலாப் பயணி கள் கண்டு ரசித்தனர். மலை மாவட்டமான நீலகிரி, சர்வதேச சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இங்குள்ள  சுற்றுலாத் தலங்களை காண ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி கள் வருகை தருகின்றனர். நாள்தோறும் கர்நா டகா, கேரளம், தமிழகத்தின் பல்வேறு பகுதி கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், உதகை அருகே உள்ள பைக்காரா நீர்வீழ்ச்சி இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி பகுதியை வனத்துறையினர் மேம்படுத்தவும், பராமரிப்புப் பணிகள் மேற் கொள்ளவும் கடந்த 3 மாதங்களாக மூடப் பட்டு பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது வனத்துறை சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்காக பைக்காரா நீர் வீழ்ச்சி சுற்றுலாத் தலம் திறந்து விடப்பட்டுள் ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பைக் காரா நீர்வீழ்ச்சி பகுதியில் அதிகளவில் வருகை தந்து, நீர்வீழ்ச்சியை கண்டு மகிழ்வ தோடு புகைப்படம் எடுத்தும் மகிழ்ச்சிய டைந்தனர். மற்ற பகுதிகளிலுள்ள நீர்வீழ்ச்சிக ளில் குளிக்க அனுமதி உள்ள நிலையில், இந்த  நீர்வீழ்ச்சியானது மிகவும் அபாயகரமான தாக உள்ளதால் இங்கு சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் பலி

கோவை, டிச.27- கோவை அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தில் பயணித்த தம்பதியர் மீது மோதிய விபத் தில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். கணவன் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளார். கோவை என்.எச். சாலை மரக்கடை பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக். இவர் தனது மனைவி ராபியத்துல் பஷிரியாவுடன் வெள்ளியன்று மாலை பாலக்காடு சாலை வழியாக சுண்ணாம்புகாளவாய் பகுதியில் குனியமுத்தூர் நோக்கி இருசக்கர வாகனத் தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, மதுக்கரை நோக்கி அதிவேகமாக சென்ற ‘கோகுலம்’ தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் பக்கவாட்டில் மோதியது. இந்த மோதலில் இருசக்கர வாகனத்தில் பின் னால் அமர்ந்திருந்த ராபியத்துல் பஷிரியா பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முகமது ரபீக் கண்முன்னேயே மனைவியின் உயிர் பிரிந்ததை கண்டு  அதிர்ச்சியடைந்தார். அவரும் படுகாயம டைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கோவையில் தனியார் பேருந்துகள் அதிவே கமாக இயக்கப்படுவதால் இதுபோன்ற விபத் துகள் அடிக்கடி நிகழ்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  இந்த விபத்து நடந்த இடத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதி வான கோரக் காட்சிகள் வெளியாகி நெஞ்சை  பதைபதைக்க வைத்துள்ளன. இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வட வள்ளி போக்குவரத்து போலீசார், பேருந்து  ஓட்டுநர் கந்தேகவுண்டன் சாவடி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனியார் பேருந்துகளின் அதிவே கத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும் பத்தினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\

உதகைக்குள் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு

உதகை, டிச.27- கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண் டிகை விடுமுறையை முன்னிட்டு வரும் ஜன.5 ஆம் தேதி வரை உதகை – மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட் டுள்ளது. இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை ஒட்டி நீலகிரி மாவட்டத்திற்கு சுற் றுலாப் பயணிகளின் வருகை அதிக ரித்து வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் டிச.25 முதல் ஜன.5 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணி களின் வாகனங்கள் குன்னூர் வழியா கவும், உதகையில் இருந்து மேட் டுப்பாளையம் செல்லும் வாகனங் கள் கோத்தகிரி வழியாகவும் அனு மதிக்கப்படுகின்றன. இருப்பினும் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்கள், உள் ளூர் வாகனங்கள் மற்றும் அரசு பேருந் துகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. மேலும், கூட லூர் வழியாக உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் எச்பிஎப் பகுதியில் நிறுத்தப்பட்டு, அரசு சுற்றுப் பேருந்துகள் மூலமாக சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல  வேண்டும். குன்னூர் வழியாக உத கைக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் உதகை ஆவின் பகுதியில் நிறுத்தப் பட்டு, அங்கிருந்து அரசு சுற்றுப் பேருந்துகளில் செல்ல வேண்டும்.  மேலும், கோத்தகிரியில் இருந்து உதகைக்கு வரும் அனைத்து சுற் றுலா வாகனங்களும் கட்டபெட்டு சந் திப்பில் திருப்பி விடப்பட்டு, குன்னூர்  வழியாக உதகை வந்தடையலாம். உதகையிலிருந்து மேட்டுப்பாளை யம் செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் சேரிங்கிராஸ், பிளாக் பிரிட்ஜ் வழியாக கோத்தகிரி நோக்கி திருப்பி விடப்படும். அத்தி யாவசிய பொருட்களான பால், பெட்ரோலியம், கியாஸ் ஏற்றி வரும் வாகனங்கள் தவிர, அனைத்து கன ரக வாகனங்களுக்கும் ஜன.5 ஆம்  தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உதகை நக ருக்குள் நுழைய அனுமதியில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

நேர மாற்றம்

சேலம், டிச.27- ஈரோடு - சென்னை சென்ட்ரல் (22650) இடையே யான ஏற்காடு விரைவு ரயில் ஈரோட்டில் இருந்து நாள்தோ றும் இரவு 9 மணிக்கு புறப் பட்டு, சென்னை சென்ட்ரலை  மறுநாள் அதிகாலை 3.40 மணிக்கு அடைந்து வந்தது. இந்நிலையில், ஈரோட்டிலி ருந்து ஜன.1 முதல் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் அதிகாலை 4.25 மணிக்கு சென்னை சென்ட் ரலை அடையும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.