நலவாழ்வு உரிமைக்கான கருத்தரங்கம்
தருமபுரி, டிச.27- தருமபுரியில் நடை பெற்ற நலவாழ்வு உரிமைக் கான கருத்தரங்கில் பலர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்ட நல வாழ்வு உரிமைக்கான கூட்ட மைப்பு சார்பில், ‘நலவாழ்வு உரிமை சட்டம் ஏன் தேவை?’ என்ற தலைப்பில் தருமபுரி ஐஎன்ஏ கூட்டரங்கில் சனியன்று கருத்தரங்கம் நடைபெற்றது. அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் கூத்தப்பாடி மா.பழனி தலைமை வகித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி அருள்குமார் வரவேற்றார். மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்க மருத்துவர்கள் பகத்சிங், கருணாகரன் மற் றும் ஓய்வுபெற்ற மருந்து விற்பனை பிரதிநிதி கள் சங்க தலைவர் ரமேஷ் சுந்தர், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க தலைவர் நாக ராஜன் ஆகியோர் கருத்துரையயாற்றினர். இக்கூட்டத்தில், நலவாழ்வு சேவைக்கான உரிமை சட்டம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
