tamilnadu

img

சாலைப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

சாலைப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

திருப்பூர், டிச.27- திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டம் அலகு - 2 சார்பில் கருமாபாளையத்தில் ஏழு நாள்  சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. முகாமின் 5 ஆம் நாளான வெள்ளியன்று  மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வழிகாட்டி  நிகழ்வும், வித்தியாசமான முறையில் சாலைப் பாது காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் சிறப்பு  விருந்தினராக கல்லூரியின் முன்னாள் முதல்வர் சண்முக சுந்தரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், அனைவருக்கும் ஒரு  இலக்கு இருக்க வேண்டும். அந்த இலக்கிற்காக தங்களை  செதுக்க வேண்டும். போட்டித்தேர்வுகளை தன்னம்பிக்கையு டன் எதிர்கொள்ள வேண்டும். முயற்சி தோற்கலாம், முயன்ற வர் சோர்ந்து விடக்கூடாது என்று பேசினார். கருமாபாளையம்  முன்னாள் பஞ்சாயத்து துணைத்தலைவர் சண்முகசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். பிறகு  கருமாபாளையம் பிரிவு பேருந்து நிறுத்தத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசி போக்குவரத்து காவல் ஆய்வாளர் வனிதா மற் றும் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் லோகநாதன்  ஆகியோர் நிகழ்வினை துவக்கி வைத்தனர். மாணவ மாணவி கள் தலைகவசம் அணியாமல் சென்று விபத்து ஏற்பட்டது போன்று தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும்,  பதாகைகளை ஏந்தியும், விழிப்புணர்வு வாசகங் களை கூறியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அவிநாசி போக்குவ ரத்து காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.