திருப்பூரில் தண்டவாள பராமரிப்புப்பணி
திருப்பூர், டிச.27- திருப்பூரில் தண்டவாள பராமரிப்பு பணி சனியன்று நடை பெற்றது. இதனால் 2 ஆவது ரயில்வே கேட் மூடப்பட்டு வாக னங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் 2 ஆவது ரயில்வே கேட் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய முக்கிய போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது. தினந் தோறும் இந்த ரயில்வே கேட் பகுதியை பல்லாயிரக்க ணக்கான வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம். இந்நிலை யில், சனியன்று ரயில் தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள் ளப்பட்டது. இதனால் காலை முதல் மாலை வரை ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. எந்தவித வாகனங்களும் அனு மதிக்கப்படவில்லை. இதனால் இந்த பாதையில் செல்லக் கூடிய வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்றது. தண்ட வாள பகுதியில் வாகனங்கள் இடையூறு இல்லாமல் சென்று வரும் வகையில் சோதனை மேற்கொள்ளப்பட்டு தேவை யான மேம்பாட்டு வசதிகள் மேற்கொள்ளப்பட்டது.
