tamilnadu

img

ஜாக்டோ – ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

ஜாக்டோ – ஜியோ சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

தருமபுரி, டிச.27- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ள நிலை யில், சனியன்று வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை  நிறைவேற்ற வேண்டும். வரைய றுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண் டும். ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஜாக்டோ -  ஜியோ சார்பில் ஜன.6 ஆம் தேதி  முதல் காலவரையற்ற வேலை  நிறுத்த போராட்டம் நடைபெற வுள்ளது. இந்நிலையில், இப்போ ராட்டத்திற்கான ஆயத்த மாநாடு சிஐடியு தருமபுரி மாவட்டக்குழு அலுவலகத்தில் சனியன்று நடை பெற்றது. இம்மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எம்.சுருளி நாதன், பி.எம்.கெளரன், இராசா.ஆனந்தன், கே.பாஸ்கரன், க.சாமி நாதன், பி.பழனியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தமி ழக தொடக்கப்பள்ளி ஆசிரியர்  கூட்டணி மாநில பொதுச்செயலா ளர் கோ.காமராஜ் சிறப்புரையாற்றி னார். இம்மாநாட்டில், அரசு ஊழியர் கள், ஆசிரியர்களை பெருமளவில் பங்கேற்க செய்து, போராட்டத்தை வெற்றிபெற செய்வது என முடிவு செய்யப்பட்டது. ஈரோடு இதேபோன்று, ஈரோடு ஒற் றுமை அரங்கில் நடைபெற்ற ஆயத்த மாநாட்டிற்கு, ஜாக்டோ -  ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்கள் சி.விஜயமனோகரன், பி.சர வணன், பி.எஸ்.வீரா கார்த்திக், அ. மதியழகன், அ.ஆறுமுகம், மா. மாதேஸ்வரன் ஆகியோர் தலைமை  வகித்தனர். மாநில ஒருங்கிணைப் பாளர் ச.நேரு சிறப்புரையாற்றி னார். திரளான அரசு ஊழியர், ஆசிரி யர்கள், பணியாளர்கள் பங்கேற்ற னர். சேலம் சேலத்தில், வேலை நிறுத்த ஆயத்த மாநாடு சேலம் நான்கு ரோடு அருகில் உள்ள சேலம் கட் டட பொறியாளர்கள் தொண்டு அறக்கட்டளை கட்டிடத்தில் நடை பெற்றது. இதில், மாநில ஒருங்கி ணைப்பாளர் ஆ.ஆறுமுகம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பு. சுரேஷ், கோவிந்தன், வே.அர்த்த னாரி, சங்கர், திருமுருகவேல், ஆகி யோர் பங்கேற்றனர். கோவை கோவை ஆட்சியர் அலுவல கம் அருகே உள்ள அரசு ஊழியர் சங்க மாவட்டக்குழு அலுவலகத் தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஜாக்டோ - ஜியோ மாவட்ட ஒருங்கி னைப்பாளர் ஜெகநாதன் தலைமை யேற்றார், மாவட்ட ஒருங்கிணைப் பாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். மாநில ஒருங்கிணைப்பாளர் மாய வன் சிறப்புரையாற்றினார்.