உடலுறுப்பு தானத்தில் தருமபுரி அரசு மருத்துவமனை முதலிடம்!
தருமபுரி, டிச.27- உடலுறுப்பு தானத்தில், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 3 வருடங்களாக முதலிடம் வகித்து வருகி றது. தருமபுரியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளி களாக தினந்தோறும் 3 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்ற னர். தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இருந் தும் கணிசமானோர் இங்கு சிகிச்சை பெற வருகின்றனர். இந்நிலையில், விபத்து கார ணமாகவோ, உடல் நலக்குறைவினாலோ மூளைச்சாவு அடைந்த நிலையில், உடலு றுப்புகள் செயல்பாட்டில் இருந்தால் அந்த உடலுறுப்புகளை பிறருக்கு கிடைக்கும் வகையில் தானம் செய்யலாம் என தமிழக அரசின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு உடலுறுப்புகளை தானம் செய்பவர்களின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறு கையில், தருமபுரி அரசு மருத்துவமனை கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது மாநில அளவில் பி-தர நிலையில் உள்ளது. இந்த பிரிவில் உடலுறுப்பு தானத்தில் கடந்த 3 ஆண்டுகளாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மாநில அளவில் முத லிடம் வகித்து வருகிறது. இந்த மருத்துவம னையில் கடந்த 2023 ஆம் ஆண்டு 7 பேரும், 2024 ஆம் ஆண்டு 14 பேரும், 2025 ஆம் ஆண்டு தற்போது வரை 11 பேரும் உடலுறுப்பு தானம் செய்துள்ளனர். தானமாக பெறப்பட்ட கண் கள், சிறுநீரகம், இருதயம் உட்பட பல்வேறு உடலுறுப்புகள், மாற்று உறுப்புகளாக பொருத் தப்பட்டு 136 பேர் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் தமிழக அளவில் தருமபுரி மாவட்டம் கடந்த 3 ஆண்டுகளாக உடல் உறுப்புகளை தானமாக பெறுவதில் மாநில அளவில் முத லிடம் பிடித்து சாதனை படைத்து வருகி றது, என்றனர்.
