முறையான சாக்கடை வசதி கேட்டு சிபிஎம் சார்பில் கண்டன பேனர்
சேலம், டிச.27- சேலம் மாநகராட்சிக்குட்பட்ட ஜாகீர் ரெட்டிபட்டி பகுதியில் நில வும் மோசமான சாக்கடை கால் வாய் பிரச்சினையைத் தீர்க்க வலியு றுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன பேனர் வைத்து மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். சேலம், ஜாகீர் ரெட்டிபட்டி மந்த மாரியம்மன் கோயில் தெரு மற்றும் நஞ்சப்பன் தெரு ஆகிய பகுதிக ளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதிகளில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப முறையான சாக் கடை கால்வாய் வசதிகள் இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர். தற்போதுள்ள கால்வாய்கள் வெறும் அரை அடி ஆழம் மட்டுமே கொண்டிருப்பதால், கழிவுநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற் கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியின் கழிவுநீர் சிக்க லுக்கு நிரந்தரத் தீர்வாக, அருகி லுள்ள சிலம்பம் கவுண்டர் சாலை பகுதியில் உள்ள பிரதான சாக்கடை கால்வாயுடன் இதனை இணைப் பதே எளிய வழியாகும். ஆனால், இந்த இணைப்பை ஏற்படுத்துவ தற்கு தனி நபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மாநகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனிநபர் எதிர்ப்பை காரணம் காட்டி, நூற்றுக்கணக்கான குடும் பங்களின் நலனைப் புறக்கணிப் பது நியாயமற்றது என சிபிஎம் மேற்கு மாநகரம் ரெட்டிபட்டி கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அப்பகுதியில் கண்டன பேனர் வைக்கப்பட்டுள்ளது. “மாந கராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பழுதடைந்த சாக்கடை களை புதுப்பிக்க வேண்டும். தனி நபர் எதிர்ப்பை கடந்து, சிலம்பம் கவுண்டர் சாலை கால்வாயுடன் ஜாகீர் ரெட்டிபட்டி சாக்கடையை இணைத்து கழிவுநீர் தடையின்றி வெளியேற வழிவகை செய்ய வேண்டும்” என வலியுறுத்தி யுள்ளனர்.
