விவசாயத் தொழிலாளர் சங்க கிளை துவக்கம்
உடுமலை, டிச.27- தாராபுரம் தாலுகா சின்னக்கம்பாளையம் பேரூராட்சி சோமனூர் புது காலனியில் வெள்ளிக்கிழமை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளை அமைக்கப் பட்டது. இக்கூட்டத்தில் சங்கத்தின் நோக்கங்களை விளக்கி யும், எதிர்கால பணிகள் குறித்தும் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பஞ்சலிங்கம் பேசினார். சங்கத்தின் தாராபுரம் தாலுகா தலைவர் கனகராஜ் புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிளை நிர்வாகிகளை அறிமுகம் செய்து வாழ்த்திப்பேசினார். இதில் கிளைத் தலைவராக முத்துச்சாமி, செயலாளாராக கோபால், பொருளாளராக ரவி மற்றும் துணைத் தலைவராக ஆறுமுகம், துணைச் செயலாளராக ரவிக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
