tamilnadu

img

காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தம் திருப்பூரில் ஜாக்டோ ஜியோ மாநாடு

காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு ஆயத்தம் திருப்பூரில் ஜாக்டோ ஜியோ மாநாடு

திருப்பூர், டிச.27– திமுக அரசு அளித்த தேர்தல் கால  வாக்குறுதிகளை நிறைவேற்ற வலி யுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்கள் மற் றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு  செயல் மேடை (ஜாக்டோ ஜியோ),  ஜன.6 ஆம் தேதி முதல் காலவரை யற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்வ தற்கு, திருப்பூரில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை  அமலாக்குவது, அரசுத் துறைகளில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை  ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு வரைய றுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண் டும். ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்து றையில் பணியாற்றும் பணியா ளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதி  நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத்து றைகளிலும் தனியார் முகமை மூலம்  பணியாளர்களை நியமனம் செய் வதை உடனடியாகத் தடை செய்ய  வேண்டும். சாலைப் பணியாளர்க ளின் 41 மாத கால பணி நீக்கக்  காலத்தை நீதிமன்ற உத்தரவுப்படி  பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். தொடக்க கல்வித்துறை யில் பணிபுரியும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பாதிப் பினை ஏற்படுத்தும் பள்ளி கல்வித் துறை அரசாணை எண் 243ஐ உடன டியாக ரத்து செய்ய வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ  சார்பில் ஜன.6 ஆம் தேதி முதல்  காலவரையற்ற வேலை நிறுத்தம்  செய்யப்படும் என அறிவித்துள்ள னர். அதன்படி போராட்ட ஆயத்த  மாநாடு திருப்பூர் சிடிசி பகுதியில் சனி யன்று நடைபெற்றது. ஒருங்கிணைப் பாளர் செ.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். தங்கபாண்டி யன் வரவேற்றார். ஒருங்கிணைப்பா ளர்கள் ராஜேந்திரன், மா.பாலசுப்பி ரமணியன், சி.பாண்டியம்மாள், நா. வேலுமணி, மா.ஜெயபாலன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஜாக்டோ ஜியோ உயர்மட்ட  குழு உறுப்பினர் அம்சராஜ் சிறப்புரை யாற்றினார். மேலும்  இதில், 2019 ஆம் ஆண்டு  போராட்டத்தில் சிறை சென்ற 72 அரசு  ஊழியர்கள், பணி மாறுதல் பெற்ற  18 பேருக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. வழக்கறிஞர் வை. ஆனந்த் வாழ்த்திப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச்செய லாளர் ராமன் நன்றி கூறினார்.