மியான்மர்,மே.13- மியான்மர் ராணுவ தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர் தபாயின் நகரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான விமான படையினர் வீசிய வெடிகுண்டு அப்பகுதியில் உள்ள பள்ளி மேல் விழுந்ததில் 2 ஆசிரியர்கள் மற்றும் 20 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதேபோன்று 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளி மற்றும் கிராமத்தின் மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 7 குழந்தைகள் உள்பட 13 பேரும் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தாக்குதலில் 160 பேர் வரை கொல்லப்பட்டனர்.
கடந்த 2021ஆம் ஆண்டும் முதல் தற்போது வரை 6,600க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.