சிவகாசி ஆண்டியாபுரத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ஆண்டியாபுரத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 10 அறைகள் தீயில் கருகி தரைமட்டமாகின.
சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைத்து உள்ளே சிக்கியிருப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நடந்த மாரியம்மாள் பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.