நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச அனுமதி மறுப்பு
வலுக்கும் கண்டனம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை காலை துவங்கியது. முதல் நாளிலேயே ஆபரேசன் சிந்தூர் தொ டர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இந்த கிளர்ச்சி போராட்டத்தால் மக்க ளவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக “இந்தியா” கூட்டணி எம்.பி.,க் களின் தொடர் முழக்கத்தால் பிரதமர் மோடி மக்களவையை விட்டு ஓட்டம் பிடித்தார். இந்நிலையில், ஒத்திவைப்புக்கு முன் மதியம் 12 மணிக்கு மக்களவை தொ டங்கியது. பாஜக எம்.பி., ஜகதாம்பிகா பால் அவைக்கு தலைமை தாங்கினார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுவதற்கு எழுந்து நின்றார். ஆனால் பாஜக எம்.பி., ஜகதாம்பிகா பால் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை. ஆனால் பாரபட்சமாக ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மட்டும் ஜகதாம்பிகா பால் பேசுவதற்கு அனுமதி அளித்தார். இதற்கு “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கடும் கண்டனம் தெரிவித்து, கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பாக, நாடாளுமன்றத்து க்கு வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி பேசுகையில்,”பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் அரசு தரப்பி னர் பேசுவதற்கு அனுமதி வழங்கப் படுகிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலை வர்கள், எம்.பி.,க்கள் பேசுவதற்கு அனுமதி இல்லை. நான் மக்களவை எதிர்க் கட்சித் தலைவர், பேசுவது எனது உரிமை. ஆனால் பேச அனுமதிக்க மறுக்கிறார் கள். இது புது வகையான உத்தி. பிரதமர் அவையைவிட்டு வெளியேறிவிட்டார். அவர்கள் அனுமதித்தால் விவாதத்தை தொடங்கியிருக்க முடியும். விதிமுறை என்னவென்றால், அரசு தரப்பினர் பேச அனுமதிக்கப்படும் பட்சத்தில், எங்க ளுக்கும் பேசுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். அதைதான் நாங்கள் எடுத்து ரைத்தோம். ஆனால், எங்களை அனு மதிக்கவில்லை” என கண்டனம் தெரி வித்தார்.