states

“நூலிழையில் தப்பிய  ஏர் இந்தியா விமானம்”

“நூலிழையில் தப்பிய  ஏர் இந்தியா விமானம்”

திங்கள்கிழமை காலை கேரள மாநிலம் கொச்சியிலிருந்து வந்த “ஏர் இந்தியா A-320, AI-2744” விமா னம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்டது. மும்பை விமான கட்டுப் பாட்டு அறை அனுமதி வழங்கியது. விமானத்திற்குள் 100க்கும் மேற் பட்ட பயணிகள் இருந்துள்ளனர். விமா னம் தரையிறங்கும் போது கனமழை கார ணமாக ஓடுபாதையை (27 பாதை) விட்டு தாண்டிச் சென்று, செப்பனிடப் படாத பகுதிக்குள் புகுந்தது. எனினும் விமானியின் சாதுர்யத்தால், விமா னத்தை லேசாக மேலே எழுப்பி மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தொ டர்ந்து பயணிகள், விமான ஊழியர்கள் பத்திரமாக விமானத்தில் இருந்து வெளி யேற்றப்பட்டனர். விமானி விரைவாக “ஓவர் டேக்” கொடுத்ததால் நூலிழை யில் ஏர் இந்தியா விமானம் தப்பியது. இல்லையென்றால் விமானம் விபத்தில் சிக்கி இருக்கும். கட்டுப்பாட்டு அறையின்  கவனக் குறைவு  கனமழை காரணமாக மும்பை விமான நிலைய ஓடுபாதையில் லேசான அளவில் தண்ணீர் தேங்கியிருந்தது. 27ஆவது பிரிவு ஓடுபாதையில் தண்ணீ ரின் அளவு அதிகமாக இருந்தது. இதனை கவனிக்காமல் மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை, ஏர் இந்தியா விமா னத்தை தரையிறங்க அனுமதி வழங்கி யுள்ளது. இதனால் தான் ஏர் இந்தியா விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது என்று தெரிகிறது.