states

img

767 விவசாயிகள் தற்கொலை சட்டமன்றத்தில் ரம்மி விளையாடும் பாஜக அமைச்சர்

767 விவசாயிகள் தற்கொலை சட்டமன்றத்தில் ரம்மி விளையாடும் பாஜக அமைச்சர்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரு கிறது. முதலமைச்சராக பாஜக  மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். தற்போது அம்மாநிலத்தில் சட்ட மன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடே சட்டமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்த போது தனது மொபைல் போனில் உயிரை காவு வாங்கும் ரம்மி விளையாடிக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் (சரத்) சட்ட மன்ற உறுப்பினர் ரோஹித் பவார் இரண்டு வீடியோக்களை சமூக வலைத் தளப் பக்கத்தில் வெளியிட்டு அம்பலப் படுத்தியுள்ளார். இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில்,”கடந்த மூன்று மாதங்க ளில் 767 மகாராஷ்டிர விவசாயிகள் தற் கொலை செய்திருக்கின்றனர். கிட்டத் தட்ட அன்றாடம் 8 விவசாயிகள் தற் கொலை செய்திருக்கின்றனர். ஆனால் மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் விவசாயத் துறை அமைச்சர் ஆன்லைன் ரம்மி விளை யாடிக் கொண்டிருக்கிறார். எல்லாவற்றுக் கும் ஒரு எல்லை இருக்கிறது” என கண்ட னம் தெரிவித்துள்ளார்.