states

தீக்கதிர் விரைவு செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாட்டு பசுவின் பாலில் அபிஷேகம் செய்யக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. “பசு என்றால் பசுதான். அதில் என்ன பிரித்து பார்க்க வேண்டி உள்ளது?. கடவுள் மீதான உண்மையான அன்பு என்பது சக மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும் சேவை செய்வதில்தான் உள்ளது; இதுபோன்ற விவகாரத்தில் அல்ல” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் தெற்கு கன்னடா, உடுப்பி மற்றும் உத்தர கன்னடா மாவட்டங்களின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) திங்கள்கிழமை கணித்துள்ளது.