states

img

பாலசோரில் பள்ளிச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ; 2 ஆசிரியர்கள் கைது

பாலசோரில் பள்ளிச் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ; 2 ஆசிரியர்கள் கைது

பாலியல் வன்முறை பூமியாகிறது பாஜக ஆளும் ஒடிசா

2024ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டுகால பிஜு ஜனதா தள கட்சியை வீழ்த்தி  ஒடிசாவில் முதன்முறை யாக பாஜக ஆட்சி அமைத்தது. தேர்தல் ஆணை யத்தின் வாக்காளர்கள் நீக்கம், சேர்ப்பு உள்ளிட்ட தில்லு முல்லு வேலைகளால், ஒடிசா வில் பாஜக வெற்றி பெற்றதாக பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. பாஜக ஆட்சியில் அமர்ந்த பின்பு உத்த ரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைப் (பாஜக ஆளும் மாநிலங்கள்) போன்று ஒடிசாவும் பாலியல் வன்முறை பூமியாக மாறி வருகிறது.  

9ஆம் வகுப்பு சிறுமி

இந்நிலையில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் மீண்டும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவி தீக்குளித்து உயிரி ழந்தார். தொடர்ந்து அதே மாவட்டத்தின் சார்மர் காவ் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி யில் 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று பள்ளியிலேயே கணித ஆசிரியரால் சிறுமி பாலியல் வன்கொ டுமை செய்யப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு பெற்றோரிடம் சிறுமி நடந்த வற்றை கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி யின் பெற்றோர்கள் புகார் அளித்ததை அடுத்து,  ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ராய்பானியா சரக காவலர்கள் பள்ளியின் தலைமை ஆசிரி யர் உட்பட 2 பேரை கைது செய்தனர்.

தலைமை ஆசிரியரின் மெத்தனம்

பள்ளியின் கணித ஆசிரியரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த  வன்கொடுமை தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சிறுமி கூறியுள்ளார். ஆனால் தலைமை ஆசிரியர் எந்த நடவ டிக்கையும் எடுக்கவில்லை. தலைமை ஆசிரிய ருக்கு பாலியல் வன்கொடுமையில் தொடர்பு இல்லை என்றாலும், மெத்தனமாக செயல்பட்ட தலைமை ஆசிரியரும் பாலியல் குற்றவாளி யோடு கைது செய்யப்பட்டுள்ளார். மகளிர் அமைப்புகளின் புகாரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

20 நாட்களில் 10க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஒடிசாவைப் பற்றி பிரதமர் மோடி எப்பொழுது பேசுவார்?

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் மேற்கு வங்க மாநிலத்திற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, “மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என செல்லும் இடமெல்லாம் பேசி வருகிறார். ஆனால் தன்னுடைய கட்சி ஆளும் ஒடிசா மாநிலத்தில் 20 நாட்களில் 10க்கும் மேற்பட்ட பாலியல் வன் கொடுமைச் சம்பவங்கள், 4 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுபற்றி பிரத மர் மோடி வாய் திறக்கவில்லை. 20 நாட்களில் 10க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்த ஒடிசாவைப் பற்றி பிரதமர் மோடி எப்பொழுது பேசுவார்? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.