tamilnadu

img

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தாவா பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 36ஆவது தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தாவா பதவியேற்றுக் கொண்டார். 
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 36ஆவது தலைமை நீதிபதியாக எம்.எம்.ஸ்ரீவஸ்தாவா பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.