மகளிர் செஸ் உலக் கோப்பை போட்டியில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மகளிர் செஸ் உலகக் கோப்பை போட்டி ஜார்ஜியாவில் நடக்கிறது. இதன் காலிறுதி சுற்றில் சீன வீராங்கனை சாங் யுக்ஸின் (Song Yuxin) என்பவரை 1.5-0.5 என்ற கணக்கில் ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
இதன்மூலம் கோனேரு ஹம்பி உலகக்கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
கோனேரு ஹம்பி, தனது 15 வயதில் 2002-ஆம் ஆண்டு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று, அப்போது உலகின் இளைய பெண் கிராண்ட்மாஸ்டராகப் பதிவு செய்தவர். மேலும், 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் மகளிர் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இருமுறை வென்றவர்.