world

img

வங்க தேசம்: பள்ளி மீது ஜெட் விமானம் விழுந்து விபத்து - 19 பேர் உயிரிழப்பு

வங்க தேச விமானப்படைக்கு சொந்தமான எப்-7 பி.ஜி.ஐ. பயிற்சி விமானம், டாக்காவில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளியின் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்க தேச விமானப்படைக்கு சொந்தமான எப்-7 பி.ஜி.ஐ. இன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்ற நிலையில், மதியம் 1.06 மணியளவில் அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து டாக்காவில் உள்ள உத்தாரா பகுதியில் இயங்கி வரும் மைல்ஸ்டோன் பள்ளியின் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. 
இந்த விபத்தில் 16 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், விமானி ஒருவர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் டாக்கா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.