ஆப்கானிஸ்தானில் நள்ளிரவும் இன்று அதிகாலையும் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 500 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுடன், தொடர்ந்து இன்று அதிகாலை 4.5 ரிக்டர் அளவிலும் அதிர்வு பதிவாகியுள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கங்களில் சிக்கி சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அந்நாட்டு அரசு ஒளிபரப்பு நிறுவனம் ரேடியோ டெலிவிஷன் ஆப்கானிஸ்தான் (RTA) தெரிவித்துள்ளது.