டப்பா எஞ்சின்
தேர்வு வினாத்தாள்கள் கசிவு என்பது பாஜக ஆளும் மாநிலங்களில் வாடிக்கையான ஒன்றாகவே மாறி யிருக்கிறது. மகாராஷ்டிராவில் பன்னி ரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடந்து கொண்டி ருக்கின்றன. ஒவ்வொரு வினாத்தாளாக கசிந்து கொண்டே இருக்கிறது. வாட்ஸ் அப் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள்கள் போடப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் அலைபேசிகளுடன் மையங்களுக்குள் செல்கிறார்கள். கழிவறைக ளுக்குச் செல்வதாகச் சொல்லி, அங்கே போய் 15, 20 நிமிடங்கள் அலைபேசிகளில் விடைக ளைப் பார்த்துவிட்டுத் திரும்பி வருகிறார்கள். இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் என்று தொடர்ந்து வினாத்தாள்கள் கசிந்தது பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓட்டை எஞ்சின்
உத்தரகண்ட் மாநிலத்தில் கிராமங்களை மேம் படுத்த வழிமுறைகளை ஆராயும் வகையில் குஜராத்துக்கு குழு செல்லவிருக்கிறது. இந்தக்குழுவில் சுமார் 50 அரசு அதிகாரிகள் இடம் பெறுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரி கிராமத்தை அமைப்பது இக்குழுவின் திட்டமாக இருக்கிறது. இந்தக்குழுவின் விவாதத்தின்போது எந்த மாநிலத்திற்கு அதிகாரிகளை அனுப்பலாம் என்ற வினா எழுந்தபோது, ஒரு சிலரிடமிருந்து கேரளம் செல்லலாம் என்ற கருத்து வந்தது. வளர்ந்த நாடுக ளுக்கு இணையான வளர்ச்சியை கேரள கிராமங்கள் அடைந்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். ஆனால், அரசியல் ரீதியான ஒப்புதல் கிடைக்காது என்பதால் குஜராத்துக்கு அதிகாரிகளை அனுப்ப முடிவு செய்திருக்கிறார்கள். ஓட்டை எஞ்சினைப் பார்வையிட்டு என்ன செய்யப்போகிறோம் என்கிறார்களாம் கேரளம் செல்லலாம் என்று பரிந்து ரைத்தவர்கள்.
வாடகை எஞ்சின்
முகநூல், இன்ஸ்டாகிராம், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்க ளில் அதிகமான அளவில் பதிவுகளைப் போடுபவர்களை “வாடகை க்கு” அமர்த்த பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் முயற்சி செய்கின்றன. இன்ஸ்டாகிராமில் குறைந்தபட்சம் 20,000 பேர் பின் பற்றக்கூடிய நபர்களைக் குறி வைத்து, அவர்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை யில் தரவிருக்கிறார்கள். பல்வேறு துறைகளில் பதிவுகளைப் போட்டுக் கொண்டிருக்கும் இவர்கள் தேர்தல் காலத்தில் அரசியல் பதிவுகளைப் போட்டு ஆதரவு தர வேண்டும் என்று பேரம் பேசப்படுகிறது. பல யூ டியூப் பதிவர்கள் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளனர். பாஜக, திரி ணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடமிருந்து மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் அப் செய்தி வந்து கொண்டிருக்கின்றன. தங்கள் எஞ்சின்கள் ஓடாமல் நிற்பதால், வாடகை எஞ்சின்களை இரண்டு கட்சிகளும் வாங்குகின்றன.
நல்ல எஞ்சின்
பீகார் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர் தல்களில் இந்தியா கூட்டணிக்குக் கடும் பின்னடைவு ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி, அக்கூட்டணியில் பிளவு ஏற்படுத்தி பலவீனப் படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியது. ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடது சாரிக்கட்சிகள் ஒற்றுமையைப் பாதுகாப்பது என்ற முடிவை எடுத்துள்ளன. அதை மாநிலங்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்தப் போகிறார்கள். ஐந்து இடங்களுக்கான தேர்தலில் நான்கு இடங் களை ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி உறுதியான வெற்றியைப் பெற்றுவிடும். ஐந்தாவது இடத்திற்குப் போட்டி இருக்கும். தங்கள் ஒற்று மையை அதில் காட்டுவதன் மூலம் பாஜகவின் பிளவு முயற்சிகள் வெற்றி பெறாது என்று உணர்த்த இந்தியா கூட்டணி விரும்புகிறது. தங்கள் எஞ்சி னில் எண்ணெய் போட்டு நன்றாக வைத்திருக்கி றோம் என்று கூட்டணிக்கட்சிகள் கூறுகின்றன.
