அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் எண்ணெய் வளம், டாலர் ஆதிக்கத்துக்கானது
இஸ்ரேல், ஈரான், இராக் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் கண்டனம்
சர்வதேசச் சட்டங்களை மீறி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் அமெ ரிக்கா-இஸ்ரேலுக்கு ஈரான், இஸ்ரேல், இராக் என உலகம் முழுவதும் உள்ள இடது சாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளன. குறிப்பாக ஈரான் மீது தாக்கு தல் நடத்த தங்கள் நாடுகளை பயன் படுத்தக்கூடாது என கூறியுள்ளன. ஈரான் துடே கட்சி ஈரானின் பிரதான இடதுசாரிக் கட்சியான துடே கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்பு போரையும் ஒரே நேரத்தில் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் ஓமன் நாட்டின் மத்தியஸ்தத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி விவகாரத்தில் ஒரு சுமூகமான உடன்பாடு எட்டப்படவிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது ஒரு வரலாற்றுத் துரோகம் என அமெரிக்காவை கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும் அமெரிக்கா ஈரானுக்கு ‘சுதந்தி ரம்’ பெற்றுத் தரப்போவதாகக் கூறுவது வெறும் கண்துடைப்பு நாடகமே. உண்மை யில் ஈரானின் ராணுவ மற்றும் பொரு ளாதாரத் திறனைச் சிதைத்து, அதனை ஒரு அடிமை நாடாக மாற்றுவதே அமெ ரிக்காவின் நோக்கம். இந்த சூழலில் ஈரானில் இருந்து வெளி யேறி அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் ‘ரெசா பஹ்லவி’ மற்றும் ‘முஜாகிதீன்-இ கல்க்’ போன்ற அமைப்புகள் இந்த ஆக்கிரமிப்பை வரவேற்பது ஈரானுக்கு இழைக்கும் துரோ கம் எனச் சாடியுள்ளது. கியூபா அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈரான் ஒத்துழைப்பதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே தாக்குதல் நடத்தியது, அமெ ரிக்கா அமைதியை விரும்பவில்லை என்ப தையே காட்டுகிறது என கியூபா கருத்துத் தெரிவித்துள்ளது.
மூலதனக் குவிப்பிற்காக உழைக்கும் வர்க்கத்தை ஏகாதிபத்திய வர்க்கம் பலி யிடுகிறது. ஐநா போன்ற அமைப்புகளுக்கா கக் காத்திருக்காமல், உலகம் முழுவதும் உள்ள மக்கள் திரண்டு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளை முடக்குவதன் மூலமே இந்தப் போரை நிறுத்த முடியும் என கியூபா அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஹடாஷ் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியும் ஹடாஸ் கட்சியும் இஸ்ரேலுக்குள்ளேயே இருந்து போர் வெறிக்கு எதிராகக் குரல் எழுப்பும் வகையில் வலிமையான அறிக்கையை வெளியிட்டுள்ளன. அவ்வறிக்கையில், இஸ்ரேல் அமெரிக்கா வின் ஏவலன்.
அது மட்டுமல்ல உலக வளங்க ளைச் சுரண்டுவதில் அமெரிக்காவிற்கு ஒரு ‘முழு கூட்டாளி’ (Full Partner) என விமர்சித்துள்ளன. காசா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படு கொலைகளை உலகத்தின் கண்ணில் இருந்து மறைக்கவே இந்த ஈரான் மீதான போர் பயன்படுத்தப்படுகிறது. இஸ்ரேலில் வாழும் அரபு சமூகங்கள் மற்றும் ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் போதிய பாதுகாப்புக் கவசங்கள் (Shelters) இல்லாத நிலையில், அவர்க ளைப் போர் அபாயத்திற்குள் தள்ளுவதை கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி வெளி யிட்டுள்ள அறிக்கையில் ஐ.நா சாசனத்தின் படி ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்பாகச் சர்வதேசச் சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால், டிரம்ப் நிர்வாகம் இதை ஒரு ‘முன்னெச்சரிக்கை தாக்குதல்’ என நியா யப்படுத்துவது முற்றிலும் சட்டவிரோ தமானது. ஈரான் மக்களை அந்நாட்டு அரசுக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பை நடத்துங்கள், ஆட்சியை “கைப்பற்றுங்கள்” என்று டிரம்ப் பகிரங்கமாகத் தூண்டினார்.
இது சர்வதேச அரசியல் நாகரிகத்திற்கு எதிரானது என விமர்சித்துள்ளது. இயற்கை வளங்களைக் கைப்பற்றும் போர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த “கட்டுப்பாடற்ற போர் வெறி”, இராக் உள்ளிட்ட அண்டை நாடுகளை ஒரு பெரும் சுழலுக்குள் இழுத்துச் செல்லும். ஏற்கெ னவே பல தசாப்தங்களாகப் போரினால் சிதைந்துள்ள இராக், மீண்டும் ஒரு பிராந்திய மோதலின் மையப்புள்ளியாக மாற்றப்படு வதை அனுமதிக்க முடியாது என இராக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. மேலும் இராக் மண்ணைப் பயன்படுத்தி அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்து வதை அமெரிக்கா உடனடியாக நிறுத்த வேண்டும். இராக்கில் உள்ள அனைத்து வெளிநாட்டு ராணுவத் தளங்களும் மூடப்பட வேண்டும். வெளிநாட்டுப் படைகள் வெளி யேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்தப் போர் ஈரானியர்களுக்கோ அல்லது இராக்கியர்களுக்கோ ஜனநாயகத்தைக் கொண்டுவருவதற்காக அல்ல.
மாறாக, இப்பகுதியின் இயற்கை வளங்களைக் கைப் பற்றவும், அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் கொள்கைகளுக்கு ஆதரவாக வும் ஏவப்பட்ட ஏகாதிபத்தியச் சதி ஆகும். துருக்கியில் உள்ள ‘இன்சிர்லிக்’ (Incirlik) போன்ற அமெரிக்க ராணுவத் தளங்கள் இந்த ஆக்கிரமிப்பிற்குப் பயன்படுத்தப்படக் கூடாது எனவும் அக்கட்சி வலியுறுத்தி யுள்ளது. அயர்லாந்து தொழிலாளர் கட்சி 1953 இல் ஜனநாயக ரீதியாக முகம்மது மொசாடெக் ஆட்சி தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த ஆட்சி ஈரானின் எண்ணெய் வளத்தைத் தேசியமயமாக்கும் நடவ டிக்கையை முன்னெடுத்தது. இதனால் அந்த ஆட்சியை அமெரிக்கா கவிழ்த்தது. இப்போதும் அதே எண்ணெய் அரசிய லுக்காகவும், டாலர் ஆதிக்கத்திற்காகவும் ஈரான் சிதைக்கப்படுகிறது. ஈரானின் தற்போ தைய மதவாத ஆட்சியை நாங்கள் ஆதரிக்க வில்லை. ஆனால் அந்த ஆட்சியை மாற்றும் உரிமை ஈரான் மக்களுக்கே உண்டு என அமெரிக்காவுக்கு அல்ல அக்கட்சி கூறியுள்ளது.
கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான எல்லை மோதல்கள் போன்ற ஏற்கெனவே இருக்கும் பதற்றங்களை இந்தப் போர் மேலும் தூண்டி, ஒட்டுமொத்த ஆசியாவையும் போர்க்களமாக மாற்றும் என கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. கிரீஸ் நாட்டில் உள்ள ‘சௌடா’ (Souda) கடற்படைத் தளத்தை அமெரிக்கா பயன் படுத்தக் கூடாது. சவூதி அரேபியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கிரீஸின் ஏவுகணைத் தடுப்புப் படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.