what-they-told

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மேற்கு திரிபுரா தொகுதியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, அது நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை சீர்குலைத்திட குண்டர்கள் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி மிகப்பெரிய அளவில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தேர்தல் ஆணையத்தால் அமைக்கப்பட்ட விசாரணை மூலம் தற்போது நிறுவப்பட்டிருக்கிறது. மேற்கு திரிபுரா தொகுதியில் நாங்கள் கோரியுள்ளவாறு 464 வாக்குச்சாவடிகளிலும் மீண்டும் தேர்தல் நடைபெற்று, அவ்வாக்குச்சாவடிகளின் வாக்காளர்கள் அனைவரும் சுதந்திரமாக தங்கள் வாக்குரிமையைச் செலுத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிழக்கு திரிபுரா தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 23க்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், அங்கும் ஒவ்வொரு வாக்காளருக்கும் உயிர்ப் பாதுகாப்பிற்கு முறையான உத்தரவாதத்தை தேர்தல் ஆணையம் அளித்திடும் என நம்புகிறோம். தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெறுவதற்கு, வாக்காளர்கள் அச்சமற்று வாக்களிக்கக்கூடிய சூழலை உருவாக்க வேண்டியது அவசியமாகும். மேற்கு திரிபுரா தொகுதியில் வாக்குச்சாவடிகளிலிருந்து ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்றும் தங்கள் வாக்குரிமையைச் செலுத்திட வாக்குச்சாவடிக்குள் நுழைவதற்கே அனுமதிக்கப்படவில்லை என்றும் நாங்கள் அறிந்திருந்த உண்மைகளை தற்போது சுதந்திரமாக விசாரணை செய்திட்ட அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர். அந்த நிலை, கிழக்கு திரிபுராவில் வராமல் பார்த்துக் கொண்டது ஆணையத்தின் கடமை.


https://www.facebook.com/ComradeSRY/

https://twitter.com/SitaramYechury