வயர்லஸ் சார்ஜருடன் கூடிய புதிய காரை பிரபல சொகுசு கார் நிறுவனமான போர்ச் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல போர்ச் (Porsche) சொகுசு கார் நிறுவனத்தின் மாடலான Cayenne EV காரை வயர்லஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.
Inductive Charging அமைப்பை பயன்படுத்தி, சார்ஜிங் பிளேட்டை காருக்கு அருகில் வைத்து 90% செயல்திறனுடன் சார்ஜ் ஆகும் வகையில் இந்த பேட்டரி அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Cayenne EV-யின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி மற்றும் விலை விரைவில் வெளியிடப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.