technology

img

அமெரிக்க செயற்கைகோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இஸ்ரோ ராக்கெட்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஏவிய பி.எஸ்.எல்.வி (PSLV) ராக்கெட், அமெரிக்காவின் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான 6.5 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியது.
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், திட்டமிட்ட நேரத்தில் செயற்கைக்கோளை துல்லியமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நேரடியாக விண்வெளி வழியாக மொபைல் போன்களுக்கு பிராட்பேண்ட் சேவையை வழங்க இந்த செயற்கைக் கோள் அனுப்பப்படுகிறது. மேலும் இதுவரை அனுப்பட்ட செயற்கைகோள்களிலேயே இதுதான் அதிக எடை கொண்டது எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.