india

img

விமான நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது என விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
விமானப் பயணிகள் வசதி, வெளிப்படைத்தன்மை மற்றும் விமான நிறுவனங்களுக்கிடையிலான நடைமுறைகளில் சீரான தன்மையை வலுப்படுத்தும் வகையில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் விமான நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, விமானங்களில் 60% இருக்கைகளை தேர்வு செய்ய தனியாக கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும், மேலும், ஒரே PNR-இன் கீழ் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் ஒன்றாகவே அமர்த்தப்பட வேண்டும்; இயன்றவரை அருகருகே உள்ள இருக்கைகளில் அமர்த்தப்பட வேண்டும்; விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகளை எடுத்துச் செல்வதற்கு, பொருந்தக்கூடிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு, வெளிப்படையான மற்றும் பயணிகளுக்கு உகந்த முறையில் வசதி செய்து தரப்பட வேண்டும். விமான நிறுவனங்கள் செல்லப்பிராணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக தெளிவான, வெளிப்படையான கொள்கைகளையும் வெளியிட வேண்டும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.