நீதி தலைகுனிகிறது!
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் புள்ளிவிவரங்கள், இந்தியக் காவல்நிலையங்கள் பாதுகாப்பகங்களாக அன்றி, மரணக் கூடாரங்களாக மாறி வருவதை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன.
நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021-22 முதல் மார்ச் 2026 வரை) 806 பேர்காவல் நிலையங்களில் உயிரிழந்துள்ளனர். இதில் அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், 2025-26 நிதியாண்டின் முதல் 74 நாட்களில் மட்டுமே 170 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இது ஒரு நாளைக்குச் சராசரியாக இரண்டுக்கும் மேற் பட்ட மரணங்கள் நடப்பதைக் காட்டுகிறது.

காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் அமைப்பாக இருக்க வேண்டுமே தவிர, ஆட்சி யாளர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளைத் தீர்த்துக்கொள்ளும் கருவியாக மாறக்கூடாது. பல மாநிலங்களில் எதிர்க்கட்சியினரை ஒடுக்க வும், மாற்றுக் கருத்துடையவர்களை அச்சுறுத்த வும் காவல்துறையை ஏவிவிடும் போக்கு அதி கரித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 2017 முதல் நடந்துள்ள 207-க்கும் மேற்பட்ட “என்கவுண் டர்”கொலைகள் இதற்கு ஒரு சான்று. சட்டப் பூர்வமான விசாரணைக்கு உட்படுத்தாமல், காவல்துறையே நீதிபதியாகவும், தண்டனை வழங்கும் அதிகாரியாகவும் மாறுவது அரசியல மைப்புச் சட்டத்திற்கே விடுக்கப்பட்ட சவா லாகும்.
அரசியல் சாசனபிரிவு 21 ஒவ்வொரு குடிமக்க ளுக்கும் வாழ்வுரிமையை உத்தரவாதம் செய்கி றது. உச்சநீதிமன்றம் வழங்கிய டி.கே. பாசு வழிகாட்டுதல்கள் காகிதத்தில் உள்ளன; ஆனால், கள யதார்த்தமோ வேறாக இருக்கி றது. காவல்துறையினரின் அராஜகத்திற்கு எதி ராக எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கைகள் வெறும் 0.18 சதவீதம் மட்டுமே என்பது, குற்றவாளி களாகக் கருதப்படும் காவலர்களுக்கு அரசு வழங்கும் ‘மறைமுகப் பாதுகாப்பு’ என்றே தோன்றுகிறது.