tamilnadu

img

வாக்களிக்க அடையாள அட்டை கட்டாயம் - தேர்தல் ஆணையம்

தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை அவசியம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
வாக்காளர் புகைப்படம் கொண்ட பூத் சிலிப்-க்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு, தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பு விநியோகிக்கப்படும். பூத் பெயர் உள்ளிட்ட விபரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். எனினும், இது வாக்காளர்களின் அடையாளத்தை மெய்ப்பிக்கும் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படாது  என தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
வாக்களிக்கச் செல்லும் போது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஆதார் உள்பட 12 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று கட்டாயம் தேவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தால் அங்கைகரிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள்:
1) வாக்காளர் அட்டை
2)ஆதார் அட்டை
3)மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை
4)புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்
5)தொழிலாளர் நல அமைச்சகக் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை/ ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை
6)ஓட்டுநர் உரிமம்
7)வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card)
8)தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை
9) இந்திய கடவுச்சீட்டு
10)புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்
11)மத்திய/மாநில அரசுகள்/பொதுத் துறை நிறுவனங்கள்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
12)பாரளுமன்ற/சட்டமன்ற/சட்டமேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை மற்றும் அமைச்சகத்தால் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை.