வடகொரியா நாடாளுமன்றத் தேர்தலில் 99.97% வாக்குகள் பெற்று கிம் ஜாங் உன் வெற்றி பெற்றுள்ளார்.
மார்ச் 15ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் கிம் ஜோங் உன் தலைமையிலான தொழிலாளர் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 99.93% வாக்குகளையும், அனைத்து இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் கிம் ஜாங் உன் மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார்.
இவருக்கு எதிராக 0.07% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. மேலும் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக ஒருவரும் போட்டியிடாததால், வேட்பாளரின் பெயரை பேனாவால் அழித்து எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்
