tamilnadu

ராணுவ வீரர்கள் வாக்களிக்க 770 தபால் வாக்குகள் அனுப்பிவைப்பு

கடலூர், ஏப். 8-கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவவீரர்கள் வாக்களிக்க 770 தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறினார்.இந்த மக்களவை தேர்தலில் 100 விழுக் காடு வாக்களிப்பு என்ற நிலையை நோக்கி மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து, இம் மாவட்டத்தை சார்ந்தவர்கள் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தபால் வாக்கு அளிக்க சிறப்பு ஏற்பாட்டை மாவட்ட தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் வெ.அன்புச்செல் வன் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது:-கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 770 பேர் வாக்களிப்பதற்காக அவர் கள் பணியாற்றும் பகுதிகளுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. பூர்த்தி செய்யப் பட்ட தபால் வாக்குகளை, தபால் நிலையங்கள் மூலமாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கலாம். இந்த தபால் வாக்குகள் வாக்கு எண்ணிக்கை நாளான மே.23 ஆம் தேதி காலை 8 மணி வரைக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.இதேப்போன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்களுக்கும் தபால் வாக்குகள் வழங்கப்படுகிறது. இதில், கடலூர் மக்களவைத் தொகுதியை சேர்ந்தவர்கள், தொகுதிக்குள்ளே பணியாற்றுவோருக்கு தேர்தல் பணிச் சான்று வழங்கப்பட்டு, அவர்கள் பணியாற்றும் வாக்குப்பதிவு மையத்திலேயே வாக்குசெலுத்தலாம்.மற்றவர்களுக்கு தபால் வாக்கு வழங் கப்படும். இந்த தபால் வாக்கு கடலூர் மாவட் டத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 6 ஆம் தேதியும், கடலூர் தொகுதிக்கு 7 ஆம் தேதியும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 12 ஆயிரம் பேர் வரையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள் ளார்கள். இவர்களில் தபால் வாக்கினைப் பெற்றவர்களில் இதுவரையில் 70 சதவீதம் வரையில் வாக்கினை செலுத்தி உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபடும் அனைவரும் தங் களது வாக்கினை கட்டாயமாகச் செலுத்த வேண்டுமென தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;