tamilnadu

img

அரசாணை 104-ஐ அமல்படுத்தி இனச்சான்று வழங்க வேண்டும்!

அரசாணை 104-ஐ அமல்படுத்தி  இனச்சான்று வழங்க வேண்டும்!

சென்னையில் மலைவாழ் மக்கள் சங்கம் போராட்டம் 

சென்னை, ஜூன் 30 - அரசாணை 104-இன் வழிகாட்டு நெறிமுறைகளின் படி, பழங்குடியின மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கக் கோரி, தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில், சென்னையில் திங்களன்று (ஜூன் 30) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புலையன், குருமன்ஸ், குறவன் இனத்தின் உட்பிரிவுகளை பழங்குடியின பட்டியலில் இணைக்க வேண்டும், ஈரோடு மாவட்ட மலை யாளி இன மக்களை, ஈரோடு மாவட்ட மலையாளி என்று பழங்குடியின பட்டியலில் இணைக்க வேண்டும், வேட்டைக்காரன் இன மக்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க அனைத்து நடைமுறைகளும் முடிந்த நிலையில், ஒன்றிய அரசுக் கான பரிந்துரையை விரைந்து அனுப்ப வேண்டும் எனவும் வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் பி. டில்லிபாபு தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்ட த்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தொடங்கி வைத்தார். மாநி லப் பொதுச் செயலாளர் இரா. சர வணன், பொருளாளர் ஆ. பொன்னு சாமி, மாநிலத் துணைத் தலைவர் ஏ.வி. சண்முகம் உள்பட பழங்குடி சங்கங்களின் தலைவர்கள் பேசி னர். சிபிஎம் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் சிறப்புரையாற்றினார். நிறைவாக, ஆர். சச்சிதானந்தம் எம்.பி. தலைமையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா. முரு கானந்தம், ஆதிதிராவிடர் மற்றும் பழ ங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் லட்சுமி பிரியா ஆகியோ ரை சந்தித்து மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டது. அப்போது, அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை, தலைமை செயலாளர் விரிவாக விளக்கினார். அவர், “புலையன், குருமன்ஸ், குற வன் இனத்தின் உட்பிரிவுகளை பழங்குடி பட்டியலில் இணைத்து ஒன் றிய அரசிற்கு அனுப்பி விட்டோம். ஈரோடு மாவட்டம் மலையாளிகள் மற்றும் பிற வேட்டைக்காரர்களின் விவகாரத்தை விரைவில் அனுப்பு கிறோம்” என்று தெரிவித்தார். அரசாணை 104-ஐ அமல்படுத்து வதைப் பொறுத்தவரை, பெற்றோர் களுக்கு இனச் சான்று இருந்தால் அவர்களது பிள்ளைகளுக்கும் வழ ங்க வேண்டும் என்று ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு உள்ளது, என்றும் இருப்பினும் நீங்கள் முறையிடுவ தால் மீண்டும் வலியுறுத்துகிறோம்” என்றும் உறுதியளித்தார். முன்ன தாக, இதேகோரிக்கையை வலி யுறுத்தி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா அவர்களிடம் மனு  அளித்துப் பேசியபோது, அவர், “மலைவேடன் பழங்குடியின மக்க ளுக்கு இனச்சான்று வழங்குவதற்கு உத்தரவிடுவதாகவும், இதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று அவர் உறுதியளித்தார். மதுரை காட்டு நாயக்கன் மக்கள் பிரச்சனையைப் பொறுத்தவரை, அதுதொடர்பான ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதாக வும், அதை விரைவில் முடித்த பின்னர் அரசாணை 104 அடிப்படை யில் சான்று வழங்க ஏற்பாடு செய்வ தாகவும் அரசு செயலாளர் லட்சுமி பிரியா தெரிவித்தார்.