விழுப்புரம், ஜூலை.14- விழுப்புரம் மாவட்டத்தில் உரிமம் பெறாத மகளிர், குழந்தைகள் விடுதிகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் த.மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- விழுப்புரம் மாவட்டத்தில் தொண்டு நிறு வனங்கள், தனியார் நிறு வனங்களால் நடத்தப்பட்டு வரும் பெண்கள், குழந்தை களுக்கான தங்கும் விடுதி கள், இல்லங்கள், தனி யார் நிறுவனங்களில் பணி யாற்றும் மகளிருக்கான விடுதிகள் போன்றவற்றை தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் விடுதிகள், இல்லங்கள் சட்டத்தின்படி, இம்மாதம் 1 ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். இணையதள வழி யில் பதிவு செய்யாத இல்லங்கள், விடுதிகள் மூடப்படும், நிர்வாகிகள் மீதும் சட்டப்படி நட வடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.