செங்கல்பட்டு, ஆக. 11- சுதந்திர தினத்தன்று (ஆக.15) ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மட்டுமே தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்றும் வேறு எவரேனும் தேசிய கொடி ஏற்றி குழப்பம் ஏற்படுத்தி னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் எச்சரித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- நாட்டின் 75-வது சுதந்திர தின திருநாள் அமுதபெருவிழாவை யொட்டி ஒன்றிய மற்றும் மாநில அரசு உத்தரவுகளின்படி செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள், கட்டிடங்களில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை தேசியக் கொடி யினை பறக்கவிட வேண்டும். மேலும், வரும் ஆகஸ்ட்15 ஆம் தேதி அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்க ளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மட்டுமே தேசியக்கொடியை ஏற்றி உரிய மரியாதை செலுத்தவேண்டும். அவர்களுக்கு பதிலாக வேறு எவரேனும் தேசியகொடியை ஏற்றுவதாக குழப்பம் விளைவித்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சிமன்றங்களில் தேசியக் கொடியை ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை இருந்தால் மாவட்ட ஆட்சியரின் தொலைபேசி எண் 9445456000 மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குநர் தொலைபேசி எண் 9384844531 ஆகிய தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். மேலும், தேசியக்கொடியினை அவமதிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.