திருச்சிராப்பள்ளி, மே 7-முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான லெனோவா, ஏழ்மை நிலையில் உள்ள திறமையான இளைஞர்களை கண்டறிந்து மடிகணினி, அலைபேசி பழுது பார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்த லெனோவா மோட்டரோலா மும்பையை சேர்ந்த பயிற்சி நிறுவனமான எடுப்ரிட்ஜ் உடன் இணைந்துள்ளது. எடுப்ரிட்ஜ் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து பணியாற்றும் நிறுவனமாகும். இதன் துவக்க விழா திருச்சியில் செவ்வாய் அன்று நடைபெற்றது. லெனோவா நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு உப தலைவர் சுபங்கர்ராய் சவுத்ரி பேசினார். அடுத்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரத்து 900 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.