ஆக்கிரமிக்கப்பட்ட மயானத்தை மீட்டெடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி மனு
ஈரோடு, ஜூலை 16- ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மயானத்தை மீட்டு, அத்துக்கல் நட வேண் டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர், மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலு வலரிடம் புதனன்று மனு அளித்தனர். ஈரோடு, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட 60 வேலாம் பாளையம் பகுதியில், டேனிஷ்புரத்தில் வசிக்கும் மக்கள் 2.5 சென்ட் நிலத்தை மயானமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த மயானம் தற் போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே மயானத்தை அளவீடு செய்து அத்துக்கல் நடவேண்டுமென வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் எம்.அண்ணா துரை தலைமையில் மனு அளித்தனர். இதேபோன்று, இந்திரா நகர் பகுதியில், பட்டியலின குடும்பங் கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் தேவைக்காக 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள் ளது. இதன் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வரு கிறது. இதனால் தண்ணீர் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, உடைந்த தொட்டியை அகற்றி புதிய ஒன்றை வைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இம்மனு அளிக்கையில், உழைக்கும் மக்கள் தொழிற்சங்க தலைவர் சி.முருகேசன், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் டி.தங்கவேல், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் லோகநாதன் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் உடனிருந்தனர்.