லக்னோ
ஆப்கானிஸ்தான் - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று விதமான போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இந்தியாவிற்கு வந்துள்ளது. 3 போட்டிகளை டி-20 தொடரை மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3-0 என கைப்பற்றிய நிலையில், 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
இந்நிலையில், சுற்றுப்பய ணத்தின் கடைசி நிகழ்வான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநக ரான லக்னோவில் புதனன்று தொடங்கியது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.இந்த லக்னோ டெஸ்ட் போட்டியில் மேற்கு இந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்த ரகீம் கார்ன்வால் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளார். 10 விக்கெட் கைப்பற்றியது மிகப்பெரிய சாதனை இல்லையென்றாலும் 140 கிலோ எடையுள்ள நபர் கைப்பற்றினால் அது உலக சாதனையாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும். 140 கிலோ எடையுள்ள கார்ன்வாலால் சுழற்பந்து வீச்சை வீசுவதற்குக் கூட அவ்வளவாக ஓடி பந்துவீச முடியாது. மிக மெதுவாக நடந்தபடி பந்துவீசும் கார்ன்வால் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையும், 2-வது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதும் பெற்றார். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் கார்ன்வால் பேட்டிங் செய்யும் நடுவருக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் ஸ்டெம்ப் தெரியாது என்பதால் கிரிக்கெட் உலகிற்கு புதிய இம்சை அரசனாக உருவெடுத்துள்ளார்.