புதுதில்லி:
பாலியல் புகாரில் தேடப்பட்டு வரும்போலிச்சாமியார் நித்தியானந்தா விநாயகர்சதுர்த்தியன்று கைலாசா நாணயங்களை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
பாலியல் புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் நபராக உள்ளவர் நித்தியானந்தா. இவர் தனக்கெனஒரு நாட்டை உருவாக்கி உள்ளதாகவும், அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் முன்னர் தெரிவித்து காணொலிகளை வெளியிட்டு வந்தார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைலாசா நாட்டிற்கு என மத்திய வங்கி, தங்க நாணயங்கள் மற்றும் பொருளாதார திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த நித்தியானந்தா விநாயகர்சதுர்த்தியன்று கைலாசா நாணயங்கள் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியான சனிக்கிழமை கால் காசு முதல் பத்து காசுவரையிலான ஐந்து வகையான நாணயங்களை போலிச்சாமியார் நித்தியானந்தா அறிமுகப்படுத்தினார். மேலும் கைலாசா நாணயங்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள 56இந்து நாடுகளுடன் வர்த்தக உறவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.விரைவில் கைலாசா நாட்டின் பாஸ்போர்ட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கைலாசா நாணயங்களை அறிமுகப்படுத்திய நித்தியானந்தாவின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பலராலும்பகிரப்பட்டு வருகிறது.