சென்னை:
உள்நாட்டு விமான பயண சேவை தொடர்பாக தமிழக அரசின் வழிகாட்டுதல்களை வெளியீட்டுள்ளது.மே 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவைகளை மத்திய அரசு தொடங்கு கிறது.தமிழகம் வருபவர்கள் டிஎன்இ பாஸ் இணைய தளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் விமானம் மூலம் தமிழகம் வருபவர்கள், வீடுகளில் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத் திக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும், விமான நிலையங்களில் பரிசோதனை செய்து, அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.