தெருநாய்க் கடியால் ரேபிஸ் நோய் பரவும் விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
தில்லி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், இது ரேபிஸ் நோய் பாதிப்புக்கு வழிவகுக்கிறதாகவும், குழந்தைகள் மற்றும் முதியவர்களே இதில் அதிகம் பலியாகின்றனர் என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்தில் அறிக்கை ஒன்று வெளியானது.
இதனை மேற்கோள் காட்டி, வெறிநாய்க் கடியால் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறதாக தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இவ்விகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
மேலும், இந்த விவகாரத்தில் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.