tamilnadu

img

"காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்" - நூல் வெளியீடு

கவிஞர் கே.ஜீவபாரதி தொகுத்து, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் பதிப்பித்துள்ள “காலம் தோறும் கம்யூனிஸ்டுகள்” எனும் நூல் வெளியீட்டு விழா இன்று (ஜூலை 28) சென்னையில் நடைபெற்றது.
சிபிஐ பொதுச் செயலாளர் டி.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நூல்களை வெளியிட முதல் தொகுதியை தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரும், இரண்டாம் தொகுதியை கவிப்பேரரசு வைரமுத்துவும் பெற்றுக் கொண்டனர். சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், நிர்வாக இயக்குநர் க.சந்தானம், ஓவியர் அன்பு ஆகியோர் உடன் உள்ளனர்.